MY WORK SONGS

MusicPlaylistRingtones Create a MySpace Playlist at MixPod.com ..............................................

MusicPlaylistRingtones Create a playlist at MixPod.com

my mp3 songs

ஊக்கமருந்து பயன்படுத்திய விளையாட்டு வீர, விராங்கணைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விசேட திட்டமொன்று சுவிட்சர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

லூசர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து விளையாட்டு உளவியல் நிபுணர் ஒருவர் இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

போதைப் பொருள் பாவனை அண்மைக்காலமாக விளையாட்டு உலகை பெரிதும் பாதித்துள்ள காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

முதல் தடவையாக ஊக்க மருந்து பயன்படுத்தும் விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஊக்க மருந்து பயன்படுத்திய வீர வீராங்கணைகளுக்கு போதியளவு ஆதரவினையும் வழிகாட்டல்களையும் வழங்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறந்த மனோ தத்துவ ஆலோசனைகளின் மூலம் ஊக்க மருந்து பாவனையை கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.